அடேங்கப்பா!, என்னைப் படைத்தவருக்கு எவ்வளவு பெரிய பரந்த மனசு? இன்னும் என்னை வைத்து சோதிக்கட்டும், போதிக்கட்டும். சோதிப்பும், போதிப்பும் அவனுடையதுயென்றால்; பாதிப்பும் அதனால் ஏற்படப்போகும் சாதிப்பும் என்னுடையது. தவிர்க்கமுடியாது என்ற நிலை வரும்போது தாங்கக்கூடிய சக்தியே என்னுள் பக்தியாய் பரிணமித்திருக்கிறது என நம்புகிறேன்.
காயும், கனியும் விலையாகும் அப்போது என் கனவும், நனவும் நிலையாகும். கவலை வேண்டாம் மனமே, கவலை வேண்டாம்.
இல்லவாசி.
பாளையம்கோட்டை.
The above lyrics wrote by an Inmates of Palayamkottai Central Prison.