என் கனவை
கதை கதையாய் சொல்ல
நான் கம்பனும் அல்ல…
என் பாச பற்றை
வரி வரியாய் சொல்ல
நான் பாரதியும் அல்ல…
என் நற்செயல் முறையை
அடிபிறழாமல் சொல்ல
நான் வள்ளுவனும் அல்ல…
என் திருட்டு முழியும் முரட்டு செயலும்
குதற்க பேச்சும் முன்கோபமும்
என்னை கெட்டவனாய் சொல்ல
நான் ஈவு இரக்கம் நேர்மையோடு
காதல் வயப்பட்ட நல்ல மனிதனென்று
இவ்வுலகிற்கு எப்படி சொல்ல…
இல்லவாசி.
பாளையம்கோட்டை மத்திய சிறை.