A Beautiful Poem on Prison School

Project : PX NEWS | Activities on August 13, 2013
Prison School
Prison School

சி(றை)றப்பு பள்ளி….

சிறைக்கதவுகள் மூடியிருந்தாலும் சிந்தனைக் கதவுகளைத் திறக்க வைத்த பள்ளி…

பசியை தீர்த்ததுமில்லாமல் படிப்பையும் பண்பையும் வளரச் செய்த பள்ளி…

ஏன்? எதற்கு? என கேள்வி ஞானம் பிறக்கச் செய்து தன்னை அறிந்து கொள்ள உதவிய பள்ளி…

தம்மதி கெட்டவர்களுக்கு நிம்மதி கிட்டிட வழிகாட்டிய பள்ளி…

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் காட்டிட தூண்டிய பள்ளி…

தழ்வுகாலத்தில் தன்னம்பிக்கையையும், தைரீயத்தையும் தந்த பள்ளி…

சிறுமையை பெருமையாய் மாற்றிட பேரூதவியாய் இருந்த பள்ளி…

கல்வி பாடத்தோடு அனுபவ பாடத்தையும் கற்றுத்தந்த பள்ளி…

வேற்றுமையை மறந்து ஒற்றுமையை வளர்த்த பாரபட்சமில்லா பள்ளி…

நம்பிக்கை என்னும் ஒளிக்கிற்றாய் எதிர்காலத்திற்கு ஏற்றமாய் அமைந்த பள்ளி…

தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்காட்ட புதையலாய் அமைந்த பள்ளி…

நாடென்ன செய்தது நமக்கு? என்றிராமல் நாமென்ன செய்தோம் நாட்டுக்கு? என்று நாட்டுப்பற்றை ஊட்டிய பள்ளி…

விழித்து எழவைத்து விடுதலை என்ற வார்த்தைக்கு இருக்கும் இயற்கையான சுகத்தை நோக்கி வீறு நடை போடச் செய்த பள்ளி…

பள்ளியல்ல… இது பல்கலைக்கழகம்!.

இவன்
இல்லவாசி
பாளையம்கோட்டை மத்திய சிறை
13.08.2013

The above poem lines are beautifully written in Tamiil by an inmate of Palayamkottai Central Prison. Prison can be a school or also be an University but it is up to a person how he / she utilize their time in it.

Follow with Us
Hide Buttons